Sunday, 21 June 2015

கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையில் சுற்றிச் சுழற்றி அடிக்கும் விடயம்

தற்போது கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையில் சுற்றிச் சுழற்றி அடிக்கும் விடயம் சமூகத்தின் நலன் கருதி அல்ல , தங்கள் கட்சி கூடிய  தொகை அங்கத்தவர்களுடன்  பாராளுமன்றம் போக வேண்டும் அதன் மூலம் நல்ல பலன் அடையும் அமைச்சுப் பதவிகளை தாங்கள் அடைய வேண்டும்  என்பதே . கூட்டம் கூட்டம் எனக் கூடிக் கலையும் இவர்கள் வீடற்ற மக்களை கட்டிப் பாழடைந்து கிடக்கும் வீடுகளில் குடி ஏற்றுவோம் ,பிரதேசத்தில் பாரிய தொழில்  சாலைகள் அமைத்து வேலையில்லா  இளம் சந்ததியினருக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்ற சிந்தனையற்று  தங்களது பாராளுமன்ற இருப்பிடத்தை எப்படி தக்கவைத்துக் கொள்வோம் என்ற நோக்கில் அலைந்து திரிகின்றனர் . ஒரு பிரதேசத்தின்  பொருளாதார முன்னேற்றமே  அங்குள்ள  சமூகத்தின் அத்திவாரமாகும் . இவைகளைக் கருத்தில் கொள்ளாது , சிறு சிறு வகைச் சலுகைகளான தையல் இயந்திரம் கொடுத்தல் , உளர் உணவு கொடுத்தல் போன்ற சமூக சேவை நிலையங்கள் மூலம் செய்து கொடுப்பவைகளை அரசியல்வாதிகள் செய்து முடிப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும் என்பதை இங்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி கூறிக் கொள்ள விரும்புகிறது .   

சமூகம் தற்போது விழிப்புணர்வுடன் உள்ளார்கள், தற்போது களத்தில் உள்ள அரசியல்வாதிகளால் மக்கள் இம் முறை ஏமாற்றப் பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிகு உண்டு என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறது 

NDPHR ஊடகப் பிரிவு

Loading...