சோமாலியாவைச் சேர்ந்த ஜிகாதியக் குழுவான அல் - ஷபாப், அந்நாட்டுத் தலைநகர் மகதிஸு மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமையன்று காலையில், அந்நாட்டின் உளவுத் துறை தலைமையகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த இடத்திற்கு அருகில் பெரிய துப்பாக்கிச் சண்டை நடக்கும் சத்தமும் கேட்டது.
தாங்கள் தாக்குதலைத் தடுத்திவிட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
புதன்கிழமையன்று துவங்கிய ரமலான் மாதத்தில், தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம் என தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர்.
அந்தக் கட்டடத்திற்குள் இருந்த உளவுத் துறை அதிகாரிகள் பலரைக் கொன்றுவிட்டதாக பயங்கரவாதிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு அதனை மறுத்திருக்கிறது.
