மத்திய தரைக்கடல் வழியாக படகுகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையும் குடியேரிகளின் எண்னிக்கையை குறைக்கும் நோக்கிலான புதிய கடற்படை கண்காணிப்பு அமைப்பு ஒன்றை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் உடன்பாடு எட்டியிருக்கிறார்கள்.
விமானங்கள், படகுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என அனைத்தையும் பயன்படுத்தி வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு ஆட்களைக் கடத்தும் குற்றக்கும்பல்கள் தொடர்பான தகவல்களை திரட்டி அதன்மூலம் அவர்களின் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு இந்த புதிய கட்டமைப்பு முயலும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒருலட்சம் பேர் இதுவரை இப்படி மத்திய தரைக்கடல் வழியாக படகுகள் மூலம் ஐரோப்ப்பாவுக்குள் வந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
குறைந்தது இரண்டாயிரம் பேர் கடலில் மூழ்கிவிட்டதாக தெரியவந்திருக்கிறது.