கிரேக்கம் வாங்கியக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பில், கடன் கொடுத்தவர்கள் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் முன்வைத்திருந்த விதிகளை நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்ள விரும்புவதாக கிரேக்கத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆனால் கிரேக்கத்தின் இந்த நிலைப்பாட்டை ஜெர்மனி ஏற்கனவே நிராகரித்துவிட்டது.
கிரேக்கம் சார்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த மாற்றியமைக்கப்பட்ட யோசனைகள் கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் கடன் கொடுத்தவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பங்குச் சந்தைகளில் சாதகமான சூழல் உருவானது.
