Wednesday, 22 July 2015

மகிந்தவை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவே நான் தேர்தலில் குருநாகலில் போட்டியிடுகிறேன்-சிவாஜிலிங்கம்

sivajilingam-001
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா , சரத் பொன்சோகாவையும் சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறியே நான் ஜனாதிபதித தேர்தலிலும் போட்டியிட தயாராகியுள்ளேன்.
இத்தகைய நிலையில் எனக்கு பணம் மகிந்த ராஜபக்சாவினால் தரப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தாவினால் கூறப்படுவதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது? என்;பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற சுயேச்சை வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துக்  தெரிவிக்கையில்
பன்றிக்கு கனவிலும் மலம் உண்பது தான் எண்ணம் என்பதைப் போல டக்ளஸ் தேவானந்தாவிற்கு எப்போதும் பணத்தின் சிந்தனை.
இன்று உண்மைக்குப் புறம்பாக நான் அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்று வருவதாக கூறி வருகிறார். கடந்த காலம் தொடங்கி நான் தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களையும, காணாமல் போனவர்கள் தொடர்பிலும் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்பதில நான் தெளிவாக இருக்கின்றேன்.
குருநாகலை மாவட்டத்தில் நான் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவது வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் இல்லை இன்றைய ஜனாதிபதியையும் மற்றும் முன்னாள் ஜனாதிபதியையும் எதிர்க்க வேண்டும் என்பதற்;காகவே சுயேச்சையாக தேர்தலில் நிற்;கிறேன்.
நான் எந்த சந்தாப்பத்திலும் மக்கள் மத்தியில் சென்று பிரச்சார நடவடிக்கைகளை மேற் கொள்ளப் போவதில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்தவுடனேயே ஊடகங்களுக்கு தெளிவாக தெரிவித்துள்ளேன்.
ஜனாதிபதித் தேர்தலின் போது பத்துக் கோடி ரூபா தருவதாக கூறி மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டதாகவும் பின்னர் தேர்தலில் குறிப்பிட்டளவு வாக்கினை பெறாமையால் மிகுதி தொகை வழங்கப்படவில்லையெனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதேபோல இன்று தேர்தல் ஆணையாளரிடம் கூறப்பட்டுள்ளது ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலும் பார்க்க கூடியளவு பாதுகாப்பு சிவாஜிலிங்கத்திற்கு வழங்க வேண்டும் என்று டலஸ் அழகப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
எனக்கு எந்த வகையான பாதுகாப்பும் தேவை இல்லை. எனத் தெரிவித்தா
Loading...
  • பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்05.09.2015 - Comments Disabled
  • அவுஸ்திரேலிய அகதிகள் மீது நடந்த அதிரடி.10.06.2015 - Comments Disabled
  • ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து அரசாங்கம் கவனம்26.12.2015 - Comments Disabled
  • NDPHR தேர்தல்  விஞ்ஞாபனம் உரை  வீடியோ இணைப்பு 27.07.2015 - Comments Disabled
  • சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?04.12.2015 - Comments Disabled