Saturday, 18 July 2015

முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பது போலியா ?

அன்பார்ந்த வாக்காளப் பெரும்மக்களே !

நமது அரசியல் வாதிகள் சமூகப் பற்று என்பதும் தனது சமூகத்துக்கு ஒரு அடையாளம் வேண்டும்  என்பதும் அதற்க்கு ஒரு கட்சி தேவை என்பதும் பதவி பறிபோகும் என்றால் எல்லாம் காற்றில் வீசப் படுவதும் இவைகளைப் பூசி மெழுக பல் வேறு சாட்டுக்களை சமூகம் மீது தூவுவதும், இவைகளை எல்லாம் நாம் சிந்திக்கும் போது எல்லாமே பதவி ஆசைக்குதான் என்பது எமக்கு  தெட்டத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு கட்சியுடன் மற்றும் ஒரு கட்சி கூட்டுச் சேரலாம் ஆனால் கட்சி மாறக் கூடாது , கட்சி ஒன்றில் சேரும் போது அக் கட்சித் தலைவனின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால  போக்குகள் அவனது கொள்கைகளை ஆழமாக 
அறிந்த பின்னர்தான்  சேர வேண்டும்.அப்படிச் சேரும் அரசியல் வாதிதான் கொள்கை சார்பானா அரசியல் வாதியாவான் 

தேர்தல் காலத்தில் தன் கட்சியை விட்டும் மாற்றான் கட்சியில் சேர்வது மத்திய கிழக்கில் வீட்டுச் சாரதி வேலைக்கு போகும் சிலர் மனைவி யையும் அவ்வீட்டுக்கு ஆயா வேலைக்கு அழைத்து செல்ல வேண்டும் , அப்போதுதான் அவர்களுக்கு வேலை கிடைக்கும் .வேலை கிடைக்க வேண்டும் என்பதுக்காக தற்காலிகமாக கள்ளக் கலியாணம் ஓன்று செய்து ஒரு பெண்ணை அழைத்துச் சென்று அங்கு குறிப்பிட்ட காலத்துக்கு குடும்பம் நடத்துவார்.மனைவி எக்கேடு கெட்டால் எனக்கு என்ன அதுதான் இச் சாரதியின் எண்ணப்பாடு,அதை வீட்டுக்குப் போனால் சமாளித்துக் கொள்ளலாம்.இங்கு நோக்கப் பட வேண்டியது மனைவி என்பது சமூகம்,குடும்பம் நடத்துவது என்பது மாற்றான் கட்சியோடு சேர்ந்து பதவியோடு  சுகம் அனுபவிப்பது . 

இதே நிலைமைதான் சிறு பான்மைச் சமூகமான அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக கட்சித் தலைவர்கள் ,அதாவது மரத்தின் தலைவர் யானையிலும் மயிலின் தலைவர் யானையிலும் தேர்தல் களம் இறங்கி உள்ளனர் .அதே நேரம் தமிழ் தலைவர்கள் அதிலும் குறிப்பாக தமிழர் உரிமைக்காக பாடு படும் தமிழ் அரசிக் கட்சி அவ்வாறு பதவிக்கும் சுக போகத்துக்கும் கூட்டுச் சேர்வதில்லை 

சமூகம் இங்கு நன்றாக சிந்திக்க வேண்டும் உங்களுக்கு மத்திய  கிழக்கில்  வீட்டுச் சாரதியாக வேலை பார்க்கும்  கணவன் வேண்டுமா ? அல்லது பிச்சை எடுத்துத் தின்றாலும் சொந்த மனைவியோடு வாழும் கணவன் வேண்டுமா?  தீர்மானம் உங்கள் கையில் 

இத்தேர்தலில்  நான் உங்கள் எதிர் கால நன்மை கருதி கேட்டுக் கொள்வது என்னவென்றால் கட்சி விட்டு கட்சி மாறிய கொள்கை அற்ற அரசிய வாதிக்கோ,அல்லது மக்கள் நம்பிய கட்சியை பரிதவிக்க விட்டு விட்டு மாற்றான் கட்சிச் சின்னத்தில் சேர்ந்துள்ள அரசியல் வாதிக்கோ உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டாம் . 

போராளிகள் புரட்சி சிந்தனையாளர்களாக மாறுங்கள் , மறு மலர்ச்சி நிச்சயம் . கொள்கை இல்லாத் தலைவன் சமூகத்துக்கு கேடு இவ்வாறான கேடு கெட்ட  அரசியல்வாதிகள் நமக்குத் தேவையா  ?

                                     தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா









Loading...
  • 2015 தேர்தலில் யார் வெற்றி…? “CID” முடிவு வெளியானது…02.08.2015 - Comments Disabled
  • அணுசக்தி ஒப்பந்தத்தால் ஈரானின் கொள்கைகளில் மாற்றம் இல்லை: அயதுல்லா கமெனெய்19.07.2015 - Comments Disabled
  • 2014 ஆம் ஆண்டு பதவிகளின் அடிப்படையிலேயே தேர்தல்: ஆணையாளர் அறிவிப்பு28.06.2015 - Comments Disabled
  • பத்தரமுல்ல பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் தீ11.10.2018 - Comments Disabled
  • கல்விமான் எஸ்.எச்.எம் ஜெமீலின் நினைவுப் பேருரைகளும் துஆப் பிராத்தனையும்08.05.2015 - Comments Disabled