அமெரிக்காவில் உருவாகும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட சரிவடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 1,42,000 புதிய வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எதிர் பார்க்கப்பட்டதைவிட இது மிகவும் குறைவு எனவும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வேலைவாய்ப்புகளே உருவாயின.
அமெரிக்கப் பொருளாதாரம் வேகத்தை இழக்கிறதோ என்ற கவலையை இந்த புள்ளிவரங்கள் ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறுகிய கால வட்டிவிகிதம் அதிகரிப்பதும் தற்போது சாத்தியமில்லாமல் போகும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.