Saturday, 14 November 2015

அரச சார்பற்ற நிறுவனங்கள் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையீடு செய்ய முயற்சி


அரச சார்பற்ற நிறுவனங்கள் சில தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையீடு செய்ய முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு தேசியப் பாதுகாப்பு விவகாரத்திலும், வடக்கு பிரச்சினைகளிலும் பாரதூரமான வகையில் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

வெளிநாட்டு நிதியின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றது.

இலங்கைக்கு எதிராக போலியான போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை இந்த அரச சார்பற்ற நிறுவனங்களே ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்துள்ளன.

இந்த அமைப்புக்கள் நாட்டில் மீளவும் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

ஐந்து நாடுகள் இந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள சிங்கள ஊடகம், இந்த அமைப்புக்களின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
  • Achieving Full Employment20.11.2015 - Comments Disabled
  • ஐ.பி.எல் சீசன் 8 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வென்றது01.05.2015 - Comments Disabled
  • தொடரும் நில அதிர்வுகள் நேபாளத்தில்26.05.2015 - Comments Disabled
  • Mahinda 'Bridge' to India & China06.07.2015 - Comments Disabled
  • 90 மீற்றர் உயரத்தில் 366 மீற்றர் நீளமான தொங்குபாலம்….14.10.2015 - Comments Disabled