இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்கும் பணிகளில் கபே
இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கபே அறிவித்துள்ளது.
அதன்படி, இளைஞர் நாடாளுமன்றிற்கான உறுப்பினர் தெரிவிற்கான தேர்தல் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்து.
தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கபேவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் 334 பிரதேச செயலகங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலில் 657 வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர்.தேர்தலின் ஊடாக 160 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மேலும் 65 பேர் மாற்றுத் திறமைகள் கொண்ட இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவ மாணவியர், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு இளைஞர் கழகங்களைச் சேர்ந்த 438,400 பேர் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு பணிகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்திலிருந்து மேற் கொள்ளப்படவுள்ளதாக ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.