பாலைவன மண்ணில் பசும் பூவாய்
பூத்தார் இன் நாளில்
எம் மா நபியே...!
பாவங்கள் யாவையும்
தீயிலிட வந்த இறைச் சுடரே!
புண்ணிய வேந்தர்
மண்ணில் பிறந்ததே
நாங்கள் பெற்ற பாக்கியமே..!
ஆதாமின் சந்ததியின்
இருட்டுப்பாதையில்
ஒளியாய் வந்த நூர் நபியே...!
பொக்கிஷமான திருக்குர்ஆனை
எமக்கு கஷ்டங்கள் போக்க
தந்த வள்ளல் நபியே..!
ஹிரா குகையும் புனிதமானது
உங்கள் பிறப்பால் ...!
ஒவ்வொரு பாங்கின்
பின்பும்ஓதும் துஆவில்
நாயகமே நாம்
தங்களைமறவோம்..!
இறைவா நன்றிகள்
என்றும்
அன்னல் நபியை
படைத்தமைக்கு!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!
"ஊதாப்பூ "

