Saturday, 19 December 2015

போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் காணாமற்போனதற்கு யார் காரணம் இராணுவமா ?













போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். என்று காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். என்று காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற காணாமல்போனோரின் உறவினர்கள் பலர், இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் போன்ற இடங்களுக்கு இராணுவத்தினர் வந்தபோது தங்களது உறவுகள் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களிடம் சரணடைந்தனர் என்றும், தற்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில் தாம் உள்ளோம் என்றும் கதறியழுதவாறு சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தனர்.

அத்தோடு, 2006, 2007, 2008ம் ஆண்டுகளில் தங்களது கண் முன்னால் உறவுகள் யாழ்ப்பாணத்தில் வைத்து இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டனர் என்றும், பின்னர் இராணுவத்தினர் அதை மறுத்தனர் என்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் தங்களது சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.இராணுவத்தால் கடத்தப்பட்ட, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை எங்கு தேடுவது எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஜனாதிபதி ஆணைக் குழு தேடிக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை 

விடுத்திருந்தனர்.காணாமல் போனோரின் உறவினர்களின் இந்தச் சாட்சியமளிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஆணைக் குழுவின் தலைவர் செல்லப்பட்டனர்.
Loading...