Saturday, 23 January 2016

ஒன்பது முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி வழக்கு!














ஒன்பது முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னதாக ஒன்பது அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளது.

குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கு தொடர்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள ஒன்பது அரசியல்வாதிகளுக்கு எதிராகவே விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிற்கு எதிராக ஆணைக்குழு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகள் ஒன்பது பேருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Loading...