நோய் மருந்தையும் மீறிய எதிர்ப்புத் திறன்மிக்க மலேரியா நோய் வகைகள் ஆப்ரிக்க கண்டம் முழுவதிலும் வெளியாகி வருவதாக தெரிவித்து புதிய கவலைகளை பிரிட்டன் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
உகாண்டா, அங்கோலா மற்றும் லைபீரியா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் செய்த பின்னர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களுக்கு பிரிட்டனில் அளிக்கப்பட்ட ஒரு முக்கிய மலேரியா சிகிச்சை முதல் முறையாக தோல்வியடைந்துள்ளளது.
ஆரம்பத்தில் ஒரு மலேரியா எதிர்ப்பு சிகிச்சையை அவர்களின் உடல் நல்ல முறையில் ஏற்று வந்தாலும், பின்னர் ஒரு மாதம் கழித்து அவர்களுக்கு மீண்டும் மலேரியா தாக்குதல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
மலேரியா நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளில், மலேரியா நோய் மருந்துக்கு இவ்வகை ஒட்டுண்ணிகள் எதிர்ப்பை உருவாக்கி இருக்கக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.