Tuesday, 12 May 2015

தனலாய் கொதிக்கும் புனித பூமி



பத்தி எரிகிறது காஸா 
நாமிங்கு பக்கோடா 
சாப்பிட்டுக்கொண்டு
Facebook இல் 
அரட்டை அடிக்கிறோம் 

எந்த அணி 
வேல்லுமேண்டு 
வேட்டிசண்டை
போடுகிறோம்-இங்கு

அங்கு பத்தி 
எரிகிறது -காஸா

பாலகன் முதல்
பாவைகளும்
பாவிகளுடன்-போராடி
மடிந்து போகினர்-அங்கு

ஆச பாசங்களுக்காய்
அங்கு போராட வில்லை 
அல்லாஹ்வின்-வீட்டை 
மீட்டு -அங்கு 
நிம்மதி பெருமுச்சி
விட -தன்
மௌத்தையே 
சுவைகின்றனர்.

மூணு வேளை
மூக்கு முட்ட -தின்னு
மூடிக்கொண்டு 
துங்குகிறோம் -இங்கு

அங்கு பத்தி எரிகிறது-காஸா 

அல்லாஹ்வை துணை 
கொண்டு-ஒப்பாரியுடன் 
தன் நடு மார்பில் 
எத்தனை சிலிப்பர் -குண்டுகள்

அழு குரலால் 
முளுக்காசாவும் 
கதி கலங்கி -நிற்கிறது

இங்கு பிஸ்சா
திண்டபடி பிறண்டு
படுக்கிறோம் -புற 
முதுகு காட்டி

கண்ணீர் வடித்து -கண்டிருக்கிறோம் 
கண்ணிராரோடு 
இரத்தாறு போட்டி போட்டு
ஓடுகிறது-காஸாவில்

அல்லாஹ்வே !
உன் உம்மத்தை 
உன் பாசக்கயிற்றால்
கட்டிவிடு

உன்னிடம் 
இப்பார்-ஏந்தும் 
அத்தனை துவாவும்
ஏற்றுவிடு !

விடிவுக்காய் 
ஏங்கும் எம் -உறவுகளுக்கு
விடிவை தந்திடு!

சகிதான சகலரையும்
பிர்தௌசில்-தங்கசசைதிடு

கண்ணீருடன் 
ஒரு ஆத்மா 
உன்னிடம் 
மண்டியிடுகிறது 

அருள் பொலிவாய் 
எல்லாம் -வல்லோனே! 
அல்லாஹ்வே!!!!!!!

ஆமின்



கவியாக்கம்: கலைமகன் ஹுதா உமர்
மாளிகைக்காடு

Loading...
  • வாக்குறுதிகள் நிறைவேறாவிடில் ஆட்சி நீடிக்காது : சுமந்திரன் எம்.பி05.11.2015 - Comments Disabled
  • கொழும்பில் பதட்டமான நிலை மாணவர்கள் பலர் காயம்28.04.2016 - Comments Disabled
  • U.S. skeptical Sri Lanka entered new era since Tamil Tiger defeat21.06.2015 - Comments Disabled
  • கண்ணீர் வடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன13.05.2015 - Comments Disabled
  • சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டம்11.06.2015 - Comments Disabled