நைஜீரியாவின் வட பகுதியில் இஸ்லாத்தை இழிவுபடுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கானோ மாகாணத்தில் இஸ்லாமியச் சட்ட ஷரியா நீதிமன்றம் ஒன்று ரகசியமாகக் கூடி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த வழக்கின் விவரங்கள் வெளியிடப்படவில்லை ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் குறைந்தது ஒருவர் பெண் என்று கருதப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள் என கானோ மாகாணத்தில் மதச் சட்ட அமலாக்கப் பொலிஸ் பிரிவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட கானோ மாகாணத்தில் குற்றவியல் சட்ட நீதிமன்றங்கள் ஒருபுறமிருக்க மதச் சட்ட நீதிமன்றங்களும் செயல்பட்டுவருகின்றன.