சிங்கள ஊடகம் ஒன்று அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்கும் திட்டம் உள்ளிடக்கப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் இதற்கு சிறுபான்மை கட்சிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
அத்துடன் இரண்டு வாக்குச் சீட்டுகளை கொண்டு தேர்தல் முறைமையை அமுலாக்குமாறும் கோரப்பட்டுவருகிறது.
ஆனால் இந்த முறைமைக்கு ஏனைய பெரும்பான்மை கட்சிகள் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், அமைச்சரவையில் இதற்கு இணங்க மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்படும் போது, இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.