Saturday, 4 July 2015

மையோன் முஸ்தபா தனிப் பட்ட முறையில் மிகவும் நல்லவர் அரசியலில் முழு முட்டாள்


மையோன்  முஸ்தபா என்று அழைக்கப் படும் எம் எம் .முஸ்தபா அவர்கள் நாட்டுக்குத் திரும்பி வருவதாக பல செய்திகள் வந்த வண்ணமுள்ளன . மையோன்  முஸ்தபா அவர்கள் மீது  ஜனாதிபதி தேர்தல்  காலத்தில் தேசத் துரோகக் குற்றச் சாட்டில் வழக்குப் பதியப் பட்டு தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற நிலையில் நாட்டை விட்டும் வெளியேறினார்.

இவரது கடந்த கால அரசியல் வாழ்க்கையினை நோக்குமிடத்து இவர் மர்ஹும் அஷரப் அவர்களால் முதல் தடவையாக போட்டி இட்ட பொதுத் தேர்தலில் வஞ்சிக்கப் பட்டவர்  என்றும்   கூறப் படுகிறது

இருப்பினும் இவரது  அரசியல் பிரவேச காலப் பிரிவில் இவரால் அரசியல் ரீதியில் ஒரு சேவையும் மக்களுக்கு செய்ததாக ஒன்றும் இல்லை .ஆனால் தனது சொந்தப் பணத்தை வாரி இறைத்தார் என்பது ஒப்புக் கொள்ளப் பட வேண்டிய உண்மை

முஸ்லிம் கான்கிரசியில் சேர்ந்து பிறகு அதில்  இருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து மீண்டும் மஹிந்த அரசியலில் பிரதி கல்வி அமைச்சுப் பதவியில் அமர்ந்து பின்னர் அப் பதவியை விட்டும் விலகி தொப்பிச் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு குப்பையைக் கொட்டி  இறுதியாக தேசத் துரோகி என்ற பட்டம் பெற்று தன்  நாட்டை  விட்டு வெளி நாட்டில் தஞ்சம் அடையும் நிலையை அடைந்தார்.

மொத்தத்தில் மையோன்  முஸ்தபா அவர்கள் தனிப்பட்ட முறையில் மிகவும் நல்லவர் ஆனால் அரசியலில் முழு முட்டாள்


சாய்ந்தமருது - அப்துல் ரஹீம்





























Loading...