Thursday, 30 July 2015

ஒரு காதை அறுத்து எறிவேன் என்று சவால் விடுவது ஒரு கட்சியின் தலைவனுக்கு அழகல்ல -NDPHR


மக்களுக்கு என்ன சேவைகள் செய்யலாம் ,தற்போது அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் , அவைகளை எவ்வாறு தீர்த்து வைக்கலாம் என்ற ஆலோசனைகள் ,முயற்சிகள் என்பன பற்றி சிந்தித்து நடவடிக்கையில் இறங்காது போயிம் போயும் அரசியலில் முதன் முதலாக களம் இறங்கியுள்ள ஒருவரை  வெற்றி பெற்றாலும் பாராளும் மன்றம் போக விட மாட்டேன் என பொதுக் கூட்டம்களில் சவால் விடுவதும்,இறைச்சிக் கடையில் வேலை செய்யும் ஒரு மாடு வெட்டும் புட்சனைப் போல் ஒரு காதை அறுத்து எறிவேன் என்று சவால் விடுவதும் ஒரு  கட்சியின் தலைவனுக்கு அழகல்ல , இது அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது ,அத்துடன் மக்கள் இவ்வாறன குண இயல்புள்ள தலைவன் பின்னால்  படை எடுப்பதும் மக்களின் அறிவீனத்தையே காட்டுகிறது என்பது எனது தனிப் பட்ட அபிப் பிராயம் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் தனது கருத்தை வி .சீ .இஸ்மாயிலுக்கு எதிரான வழக்குத் தாக்கல் பற்றி கேட்டபோது தெரிவித்தார் 


கல்முனை நிருபர் 
Loading...