ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணி அடித்து கிழக்கில் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் அடித்தளத்தினை எமது தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவாக்கியுள்ளது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பளாருமான எம்.ஜமீல் தெரிவித்தார்.
இன்று தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான கட்சி அலவலகத்தின் திறப்பு விழா சம்மாந்துறையில் இடம் பெற்றுக்கொாண்டிருக்கின்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.