Thursday, 27 August 2015

கைவிரல் அடையாள கடவூச்சீட்டு முறையால் மக்கள் அவதி



நவீன தொழில்நுட்பத்துக்கு அமைவாக கைவிரல் அடையாளத்தை உள்ளடக்கிய கடவூச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை காரணமாக கடவூச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு தாமதம் ஏற்படுவதால் தாம் மிகப்பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச முறைகளுக்கு அமைவாக இந்த கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவூச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், கடவூச்சீட்டை பெறுபவரது புகைப்படத்தை கணினி மயப்படுத்தும் போது ஏற்படும் தெழில்நுட்ப பிழைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Loading...