நல்லாட்சிக்கான தேசிய அரசங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான சத்திய பிரமான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக 45 பேர் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், இவர்களில் ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 27 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 18 பேரும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஐந்து பேரும் பதவியேற்கவுள்ளனர்.
இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த நால்வரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்காக 42 பேர் பதவியேற்றனர். இதில் 31 பேர் ஐக்கிய தேசிய முன்னணியையும் 11 பேர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் பிரதிநித்துவப் படுத்துகின்றனர்.
மொத்தமாக 48 அமைச்சரவை அமைச்சர்களில் 15 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் 33 அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
Wednesday, 9 September 2015
![]() |
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் |
Loading...
29.08.2015 - Comments Disabled
14.10.2015 - Comments Disabled
08.12.2015 - Comments Disabled
06.07.2015 - Comments Disabled
09.06.2015 - Comments Disabled