Monday, 19 October 2015

ஜிகாதி ஜானை உயிருடன் பிடிக்க உத்தரவு: பிரித்தானியா அரசு தீவிரம்










ஜிகாதி ஜான் என அறியப்படும் முகம்மத் எம்வாஸி என்பவரை உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.எஸ்.அமைப்பு ஜிகாதி ஜானை கைவிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, வேறு குழுக்களுடன் இணைந்து செயல்பட துவங்கும் முன்னரே கைது செய்ய வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு அமெரிக்க பாதுகாப்புத்துறை அலுவலகம் தெரிவிக்கையில், Emwazi தற்போது தனித்து விடப்பட்டுள்ளதாகவும், ஐ.எஸ்.தீவிரவாதிகளின் முக்கிய பகுதிகளில் இருந்து தொடர்ச்சியா அப்புறப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆதரவு பெற்ற பல பகுதிகளிலாக Enwazi பயணத்தில் இருக்கும்போதே அவரை பிடிப்பதுதான் சிறந்த தருணம் என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பெயர் வெளிப்படுத்த விரும்பாத அமைப்பு ஒன்று, ஜிகாதி ஜான், ஐ,எஸ்.குழுவினருக்கு எதிராக செயல்படும் அணிகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜிகாதி ஜான் விடயத்தில் பிரித்தானியா அரசு முன்னெடுத்து செயல்பட வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் வலியுறித்தி உள்ளனர்.

மேலும், பிரித்தானியாவின் சிறப்புப்படையினர் குர்து படையுடன் இணைந்து ஐ,எஸ்.அமைப்பில் உயர்பதவியில் இருக்கும் அபு சயஃப் எனும் தீவிரவாதியை கொலை செய்யவும், அவரது மனைவியை கைது செய்யவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...