மின்சார சபையின் 295 கோடி ரூபா ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் மூன்று குழுக்கள் விசாரணைகளை மேற் கொண்டுள்ளதாகவும் குற்றம் இடம்பெற்றிருப்பின் விரைவில் அது தொடர்பான விடயங்கள் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற மின்சார சபை ஊழியர்கள் 2344 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு உரையாற்றிய அமைச்சர், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் நிறுவனமாக இலங்கை மின்சார சபை திகழ்கிறது. இத்துறையில் தற்காலிக அடிப்படையில் பணிப்புரியும் 2344 பேர் ஒரே தடவையில் நிரந்தரமாக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருடத்திற்கு முதல் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எம்மால் பங்களிப்பு செய்ய முடிந்துள்ளமையை நாம் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றோம்.
|
Saturday, 19 December 2015
![]() |
இ.மி.ச ரூ.295 மோசடி: கண்டறிய மூன்று விசாரணைக்குழுக்கள்! |
Loading...
30.05.2015 - Comments Disabled
13.05.2015 - Comments Disabled
10.06.2015 - Comments Disabled
04.07.2015 - Comments Disabled
26.09.2015 - Comments Disabled