சவூதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கட்டிடம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிங்டம் டவர் என்றழைக்கப்படும் கட்டிடமானது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 1,007 மீட்டர் உயரத்திற்கு குறைந்தது 167 மாடியிலிருந்து 200 மாடிகள் வரை கட்டப்பட உள்ள இக்கட்டிடத்தில் 121 சேவை வசதிகளுடன் கூடிய அறைகள் ,360 குடியிருப்புவாசிகளுக்கான அறைகள், 200 அறைகள் கொண்ட 4 ஹோட்டல்கள்,அலுவலக அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இக்கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த கட்டிட பணிக்கு சுமார் 1.23 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. செங்கடல் பகுதியில் 2013ல் தொடங்கப்பட்ட இக்கட்டிட பணிகள் 2018ல் நிறைவடைய உள்ளது. இங்கு அமைய உள்ள விடுதிகளின் விற்பனை இவ்வருடம் துவங்க உள்ளதாக அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் இக்கட்டிடத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளது. இக்கட்டிட பணிகள் நிறைவு பெற்றால் 828 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு உலக சாதனையாக கருதப்படும் துபாய் புர்ஜ் கலிபா கட்டித்தை விட இக்கட்டிடமே உலகின் உயரமாக கட்டிடமாக திகழும்.