இந்த வருட நிறைவுக்குள் கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளிலுமுள்ள தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கதிரை மேசைகளை வழங்குவதற்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் முதலமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் தளபாடக் பற்றாக்குறையை நிவர்த்திக்க விசேட நிதி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இன்று கிழக்கின் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்ற போதே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்
இதனடிப்படையில் முதற்கட்டமாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கிழக்கின் அனைத்துப்பாடசாலைகளிலும் 4 ஆம் மற்றும் 5 ஆம் தரங்களில் உள்ள பாடசாலைகளில் தளபாடக்குறையுள்ளவர்களுக்கு புதிய தளபாடங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
அடுத்த்து வரும் காலப்பகுதிக்குள் படிப்படியாக தளபாடக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலுமுள்ள தளபாட பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதே தமது நோக்கமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்ததுடன் அதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கி கல்வித்துறையை வளர்ச்சியடையச் செய்யும் தமது வேலைத்திட்டத்தில்பாடசாலைகளில் தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும் ஒரு அங்கமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டதுடன் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,
விஞ்ஞானம்,ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் விரைவில் அவர்களும் நியமிக்கப்படுவார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்
Thursday, 24 November 2016
![]() |
Re: இந்த வருட நிறைவுக்குள் கிழக்கின் சகல பாடசாலைகளிலுமுள்ள 4ஆம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களுக்கான தளபாட பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும்-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் |
2016-11-24 12:07 GMT+05:30 மேகம் News <mehamnews@gmail.com>:
Loading...
27.12.2015 - Comments Disabled
21.06.2015 - Comments Disabled
29.06.2015 - Comments Disabled
02.06.2015 - Comments Disabled
26.07.2015 - Comments Disabled