சிரியாவில், இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகர் ஒன்றில், சன நெருக்கடியான சந்தையில், சிரிய அரச ஹெலிக்கப்டர்கள், பீப்பாக் குண்டுகளை வீசியதில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணமான அலப்போவில் உள்ள, அல்-பாப்பில் நடந்த இந்த தாக்குதலில், பெண்கள், மற்றும் சிறுவர் அடங்கலாக பாதிக்கப்பட்டோர் அனைவரும், அனேகமாக பொதுமக்கள் என, ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டில், அரசாங்கம் மேற்கொண்ட மிக மோசமான படுகொலைகளில் இதுவும் ஒன்று என அவர்கள் இதனை வர்ணித்துள்ளனர்.
அலப்போ நகரில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், இதனை ஒத்த தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், அதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அனேகமானோர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய அரசாங்கம், பீப்பாய் குண்டுகளை பாவிப்பதை, ஒரு போர்க்குற்றமாக , மனித உரிமை செயற்பாட்டு குழுக்கள் கண்டிக்கின்றன.