Saturday, 18 July 2015

மஹிந்தவிற்கு உதவ தடுமாறும் கருணா

karuna
தேசியப்பட்டியல் மூலம் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்.
தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பாவும் தனக்கு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கூறியிருந்த நிலையில், கடைசியில் தனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
‘போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், லக்ஸ்மன் ஹூலுகல்லவும் அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று எனது உதவியைக் கோரினர்.
அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் ஒரு பிரிவினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் 600 தமிழ் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும், இந்தச் சூழலில் இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...