பொலிஸ் நிதி மோசடி பிரிவு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தேர்தலுக்கு முன்னர் 10-15 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைப்பதற்காகவே என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அந்த பிரிவு அரசியல் தேவைகள் கருதி அமைக்கப்பட்டுள்ளதாவும் அதன்மூலம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
சரியாயின் நிதி மோசடி பிரிவு முதலில் கைது செய்ய வேண்டியது மத்திய வங்கி ஆளுநரை என்றும் ஆனால் அவர் சுதந்திரமாக உள்ளரென விமல் சுட்டிக்காட்டினார்.
2001ம் ஆண்டு ரணில் மூலம் செய்ய முற்பட்டது முடியாது போனதால் ஜோன் கெர்ரி இலங்கை வந்ததாகவும் வெசாக் பண்டிகை காலத்தில் அவர் இலங்கை வந்ததால் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்காது மறந்து போனதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.