ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனங்களை ரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஐக்கிய மக்கள் முன்னணியின் துணைத் தலைவர் சொமவிர சந்திரசிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் விஷ்வா வர்ணபால, தேர்தல்கள் ஆணையாளர் உட்பட 44 நபர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் என்.ஏ. பிறேமரதன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள சுத்ந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல்யாப்பின் படியும் தேர்தல் சட்ட விதிமுறைகளின் படியும் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள முடியாதென்று தெரிவித்திருக்கும் மனுதாரர், இந்த நியமனங்கள் சட்ட விரோதமானதென்று கூறியுள்ளார்.
இதனால், சம்பந்தப்பட்ட நியமனங்களை ரத்துச்செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.