யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை, சிலோன் தியேட்டர்ஸ் மற்றும் அஜன்டா – 14 என்பவற்றோடு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளன.
உலகத் திரைப்படங்களினூடாக ஒவ்வொரு நாடுகளின் கலாச்சாரம், பண்பாடுகளை, அந்த மக்களின் வாழ்வியலை, வரலாறுகளை எம் யாழ்ப்பாணத்து மக்களும் அறிந்து கொள்வதற்கு அரிய சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், திரைப்பட, குறுந்திரைப்பட இயக்குனர்கள், மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
|
Monday, 7 September 2015
![]() |
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா. |
Loading...
15.08.2015 - Comments Disabled
20.10.2015 - Comments Disabled
27.08.2015 - Comments Disabled
24.06.2015 - Comments Disabled
11.11.2015 - Comments Disabled