Saturday, 14 November 2015

கட்சித் தலைமைக்கு தெரியாமல் கூட்டங்களை நடத்த வேண்டாம்

கட்சித் தலைமைக்கு தெரியாமல் கூட்டங்களை நடத்த வேண்டாம்
கட்சித் தலைமைக்கு தெரியாமல் கூட்டங்களை நடத்த வேண்டாம்
கட்சித் தலைமைக்கு தெரியாமல் கூட்டங்களையோ, கலந்துரையாடல்களையோ நடத்த வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு, அதன் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியோ அல்லது சுதந்திர கூட்டமைப்போ அன்றி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் ஆதரவில் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்ற சிலர் பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்று சபையை விரைவில் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய் கிழமை சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவும், எதிர்வரும் 20 ஆம் திகதி கட்சியின் நிறைவேற்றுக்குழுவும் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
Loading...
  • 'Young men, National Democratic Party for Human Rights (NDPHR) hope is in you11.01.2016 - Comments Disabled
  • கவிதை    ஏமாற்றம் 23.05.2015 - Comments Disabled
  • அமைச்சர் ஹக்கீம் தனது காதை இழப்பாரா ?30.07.2015 - Comments Disabled
  •  கண்டனக் கூட்டம்.*சர்வதேச சமூகமே இனப்படுகொலையை, இனச்சுத்திகரிப்பினை தடுத்து நிறுத்து... !31.05.2015 - Comments Disabled
  • குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை எதிர்கொண்டுள்ள சவால்கள்24.06.2015 - Comments Disabled