மங்குஸ்தான் பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது.
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.
பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும், காளான்களையும் அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன்படுத்தி வந்தனர்.
பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது.
|
Tuesday, 26 January 2016
![]() |
மங்குஸ்தான் பழம் உண்பதால் ஏற்படும் நன்மைகள் |
Loading...
27.10.2015 - Comments Disabled
27.08.2015 - Comments Disabled
10.05.2015 - Comments Disabled
12.09.2015 - Comments Disabled
18.10.2015 - Comments Disabled