மேற்கு வெர்ஜீனிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை பிரதான பேரழிவு என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக கண்டிராத இந்த மிக மோசமான வெள்ளப்பெருக்கால் 24 பேர் இறந்துள்ளனர்.
ஆளுநர் இயரல் ரேய் டாம்பிலினின் வேண்டுகோளுக்கு இணங்க மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று வட்டாரங்களுக்கு பெடரல் அரசின் உதவியை வழங்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தற்காலிக வீடுகளை கட்டுவதற்கும் பழுதுகளை சரிசெய்வதற்கும் குடியிருப்புவாசிகள் உதவித் தொகைகளை இப்போது பெறுவர்.
30 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அங்கு பெய்த பேய் மழையால், நதிகள் மற்றும் நீரோடைகளிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பல நகரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பேர் மீட்கப்பட்டுள்ளனர்,