முறையற்ற குடியேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் தாய்லாந்தில் துவங்கியது. | படம்: ஏ.எப்.பி.
ரோஹிங்கிய முஸ்லிம்களை தங்களது நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மியான்மரில் கடந்த வியாழக்கிழமை முறைகேடான பாதுகாப்பு இல்லாத படகில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை ஐநா குழுவினர் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை அளித்தனர்.
மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை சமூக விரோதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாக மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரோஹிங்கிய சிறுபான்மையின மக்களை தங்களது நாட்டு மக்களாக மியான்மர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த நிலையில், ரோஹிங்கிய மக்கள் பிரச்சினையில் மியான்மர் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் தெரிவித்துள்ளார்.
மேலும், "அகதிகளான மக்களுக்கு ஏற்படும் பிரசின்னைகளுக்கு ஊகத்தின் அடிப்படையில் மியான்மரை காரணம் காட்டக் கூடாது. அவரகள் எங்கள் நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள கூறுவது தவறானது" என்றார்.
தாய்லாந்தில் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ளது . இதில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தை தங்களது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாக எடுத்தக் கொள்ள வலியுறுத்த உள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டது.
Thanks Hindu